உலக பாரம்பரிய வார விழா

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆலய ஆய்வு திட்டம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறையுடன் இணைந்து கொண்டாடிவரும் உலக பாரம்பரிய வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காளையார்கோவில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும்அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்களுக்கும் தொல்லியல் சார்ந்த இடங்களை எவ்வாறு ஆவணப்படுத்துதல் பற்றியும், கல்வெட்டு படி எடுத்து பண்டைய எழுத்துகளை படிப்பது பற்றியும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் தொல்லியல் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது பற்றியும் மாணவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வினை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திருமதி K.மூர்த்தீஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் AR.சரவணகுமார் மற்றும் G.பரந்தாமன் முன்னிலையிலும் தொல்லியல் ஆய்வாளர் திரு.M.பிரசன்னா மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் திரு.P.T. நாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கினர். நிகழ்வில் மாணவர்கள் இலந்தகரையில் உள்ள பல்வேறு தொல்லியல் வாழ்விடங்களையும், ஈமச்சின்னங்களையும் நேரில் சென்று பார்த்து அறிந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர்கள்  H.சங்கர் முதல்வர் புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி காளையார் கோயில் மற்றும் ஜெமினி இரமேஷ்

	

	

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *