தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள பள்ளி  மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினாப் போட்டி  நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில்  1989 ஆம் ஆண்டு முதல் துளிர் வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. காளையார்கோவில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி காளையார்கோவிலில் நடைபெற்றது. 6,7,8  வகுப்பு பிரிவில் தலா ஒருவர் வீதம் ஒரு பள்ளியிலிருந்து 3 பேர் கொண்ட குழுவாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து 24 பள்ளிகள் பங்குபெற்றன. பள்ளியில் கல்வித்துறையின் 2019-2020 க்கான அரையாண்டு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் பாடத்தில் உயிரியல், வேதியியல் , இயற்பியல் பாடங்களிலிருந்தும், 2018 செப்டம்பர்  முதல் 2019  செப்டம்பர் வரையிலான துளிர் இதழ்களிலிருந்தும், வானவியல், சுற்றுச்சூழல், பல்லுயிர்பெருக்கம்,கணித அறிவியல்  மற்றும் அன்றாட வாழ்வில் அறிவியல்  ஆகிய பகுதிகளிலிருந்தும் வினாக்கள் இடம் பெற்றன. வினாடி வினாப் போட்டியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மெய்யத்தாள் , ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சுனில்குமார் சிறப்பாக நடத்திக்கொடுத்தார்கள். ஒன்றிய  அளவில்  நடைபெற்ற போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சேம்பார் முதல் இடத்தையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  பெரியகிளுவச்சி இரண்டாம் இடத்தையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மரக்காத்தூர் மூன்றாம் இடத்தையும்,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உசிலங்குளம் நான்காம் இடத்தையும், ஆர். சி. நடுநிலைப் பள்ளி  பள்ளிதம்மம்  ஐந்தாம் இடத்தையும் பெற்றார்கள்.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  வட்டாரத் தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்   பாஸ்கர் வரவேற்றார். வட்டார செயலாளர் சாலமன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜோசப் ஆன்டோ ரெக்ஸ், லட்சுமிதேவி, இந்திராணி, தாளாளர் சேகர், அசோக்ராஜ் நிறுவன உரிமையாளர் ஆரோக்கியம், ASV நிறுவன மேலாளர் ஜெயசீலன், ரோட்டரி பட்டயத் தலைவர் ஆரோக்கியசாமி, ஜோசப் சேவியர், ஜோஸ் எர்த் உரிமையாளர் ஜான்பீட்டர், பாலாமணி ஆசிரியை, இதயா பேன்சி உரிமையாளர் ஜேம்ஸ் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் புத்தகங்களையும் வழங்கினார்கள். ஜோவன் மோட்டார்ஸ் உரிமையாளர்  பிராங்க்ளின் தேசாய், இதயம் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ஜான்சன் ஜெயக்குமார் மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு சிறப்பான மதிய உணவினை கணித பட்டதாரி ஆசிரியர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். வெற்றிபெற்ற முதல் இரண்டு பள்ளிகளும் தேவகோட்டை புனித சேவியர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற இருக்கின்ற மாவட்டப் போட்டியில் கலந்துகொள்வார்கள். வட்டாரப் பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.

 
	

	 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *