சிதலமடைந்த கருங்கல் கோவில்கள்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவி ஒன்றியத்தில் இருக்கக் கூடிய முடிக்கரை கிராமமானது காளையார்கோவிலில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. முடிக்கரை கிராமம் பழந்தமிழா்கள் பெருமளவில் வாழ்ந்த பெரிய நகரமாக இருந்திருக்கிறது. இக்கிராமத்தில் சுமார் 8 முதல் 12ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தைச் சாா்ந்த செம்பூரான் கற்களால் (கருங்கற்களால்) கட்டப்பட்ட இரு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று பெருமாள் கோவில் மற்றொன்று சிவன் கோவில். இக்கோவில்கள் தரைத்திலிருந்தே செம்பூரான் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களில் அதிக அளவில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோவில்களை வழிபடுவதற்காக கம்பா் வந்து சென்றதாகவும் வரலாறு கூறுகிறது. கண்மாயின் ஒரு கரைப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கம்பா் அந்தா தெரியிற ஊருக்கு எப்படியப்பா போகனும்னு வழி கேட்டதாகவும், அதற்கு அந்த சிறுவன் ”அடிக்கரையை புடுச்சா முடிக்கரைக்கு போகலாம்னு” கூறியதாகவும், மாடு மேய்க்கும் அச்சிறுவனின் புலமையைக் கண்ட கம்பா் மெய்சிலிர்த்து வியந்து போனதாகவும் வரலாறு கூறுகிறது.

நாட்டாா் கால்வாயின் தென்பகுதியில் அமைந்துள்ள இவ்வூாில் தொல்லியல் எச்சங்கள், செம்பூரான் கற்களால் இரண்டு பெரிய கோவில்கள், கல்வெட்டுகள் என பலவும் இருக்கின்றன. இவ்வூரின் தொடக்கமாக ஆறு உள்ளது. அதனை கடந்து சென்றால் முடிக்கரையின் மிகப்பெரிய கண்மாய் நம்மை அழைத்துச் செல்லும். இக்கண்மாயில் கிடைக்கக் கூடிய மீன்கள் மிக சுவையாக இருக்கும். இக்கண்மாய்க் கரையோரத்தில் இருக்கக்கூடிய தா்ம முனீஸ்வரா் (முனியய்யா) எனப்படும் கோவில் இவ்வூரின் நுழைவாயிலாக உள்ளது. இவை தவிர பேச்சியத்தாள் கோவில், மொட்டக்கோபுரத்தான் கோவில், காளியத்தாள் கோவில் என இன்னும் பல சிறிய கோவில்களும் உள்ளன. அதிகளவு விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமமானது மழைக்காலங்களில் பார்ப்பதற்கு பசுமையாய் காட்சியளிக்கும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *