தொல்புலச் செய்திகள்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் மக்கள் வாழ்விடங்கள், முதுமக்கள் தாழிகள் மற்றும் கல்வட்டங்கள் என்று 1000 முதல் 4000 வருடங்களுக்கு முற்பட்ட இடங்களான இலந்தக்கரை, நல்லேந்தல் பகுதியை ஜெமினி ரமேஷ், தாயமங்கலம் பகுதியில் முனைவர் ராஜேந்திரன், பெரியகண்ணணூர் பகுதியில் ஆசிரியர் சாத்தையா, முடிக்கரை பகுதியில் ஆசிரியர் முத்துக்குமார், கொல்லங்குடி பகுதியில் ஆசிரியர் காளிராசன், சிலுக்கப்பட்டி பகுதியில் ஆசிரியை நித்யா, வேளங்குளம் பகுதியில் நாள் முத்துக்குமாரும் என ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்புவரை இந்த தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் என்பது மறைமுகமாகவே நடைபெற்று வந்தநிலையில் இந்த துறை பற்றிய கவனத்தை வெகுஜனங்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திரு.அமர்நாத் அவர்களையே சேரும். அவரை பின்பற்றியே நண்பர்களுடன் ஒரு ஜாலி ட்ரிப்பாகத்தான் தேடல்களில் ஈடுபட்டு, கண்டறிந்தவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்க விரும்புகிறோம்.
இந்த இடங்கள் எங்கு உள்ளன என்று குறிப்பிடாமல் எழுதுவதற்கான காரணம் மேற்படி இடங்களை பார்க்கப்போகிறேன் என்று அங்கு செல்பவர்கள் அவற்றை சிதைத்துவிடக்கூடாது என்பதுதான். இந்த தொல்லியல் சார்ந்த தேடல்களுக்கு என்று நாங்கள் அதிக நேரம் செலவிடுவது இல்லை என்பதுதான் உண்மை.
எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பல இடங்களுக்கும் சென்று வருகிறோம்.
– திரு. ஜெமினி ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *