திருஞான சம்மந்த நல்லூர் – முடிக்கரை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிக்கரையில் 8-லிருந்து 12ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட செம்பூரான் கற்களால் கட்டப்படட இரண்டு கோவில்கள் உள்ளன.

பழந்தமிழா்கள் அதிகளவில் வாழ்ந்ததற்கான் தடயங்கள் அதிக அளவில் உள்ளன. கருப்பு சிவப்பு ஓடுகள் உட்பட பல வகையான பானை ஓடுகள், பாசிகள், சுடுமண் உருவங்கள், செம்பூரான் கற்களால் கட்டப்பட்ட கோவில்கள், கல்வெட்டுகள், செம்பூரான் பாறைகளின் சமதள பரப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்துள்ள வட்ட வடிவிலான குழிகள் என அனைத்தையும் பாா்வையிட்டனா். கல்லூாியின் விாிவுரையாளா் எழுதிய இரண்டு புத்தகங்கள் வௌியிடப்பட்டன.

இக்கோவில்களின் கல்வெட்டுகள், சிலைகள் மற்றும் கட்டுமான அமைப்பின் சிறப்பை பற்றி மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு முடிக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. தென்னரசு மற்றும் திரு. சேது (முன்னாள் சத்துணவு அமைப்பாளா்), திரு. ஹரிதாஸ், திரு. கர்ணன், திரு. ஆனந்தன், திரு. உதாரப்பெருமாள், ஆசிாியா் முத்துக்குமார் ஆகியோர் விளக்கிக் கூறினாா்கள். இறுதியாக வந்திருந்த ஊா்ப்பொியவா்கள், தொல்லியல் ஆா்வல்கள், மாணவா்கள் அனைவருக்கும் இலவசமாக புத்தகம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *