நீரின்றி அமையாது உலகு

காளையார்கோவில் நகரில் உள்ள இளைஞர்கள் மற்றும சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களை இணைத்து #நீரின்றிஅமையாது உலகு என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவின் மூலம் இணைந்த நண்பர்கள் காளையார்கோவிலில் உள்ள #நீர்நிலைகளை மழைக்காலங்களுக்கு முன்பு #தூர்வாருதல் மற்றும் வரத்துக் #கால்வாய்களை சரி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் முதற்கட்டமாக #காளையார்கோவில் நூலகம் அருகிலுள்ள மாலைகட்டி ஊரணியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் கரைகளைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டனர்.. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஊரணியில் 15 ஆண்டுகளாக நீர் நிரம்பவில்லை. இப்பகுதி மக்கள் இந்த ஊரணிக் கரையில் தான் புனித காரியங்களை செய்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு பணிகளை தொடங்கினர். ஒரே நாளில் 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். இதே போல் மீதமுள்ள #நீர்நிலைகளும், #வரத்து #கால்வாய்களும் சுத்தப்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர்கள் இன்று வரை சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் செய்த பணிகளால் மாலையிட்டு ஊரணி, ஆத்தா ஊரணி, ஆகியவற்றில் தற்போது நீர் நிறைந்திருக்கிறது.
அதே போல் காளையார்கோவின் தெப்பக்குளத்தின் வரத்துக்கால்வாய்களை சீரமைதத்தின் காரணமாக வரண்டு கிடந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலையீட்டு ஊரணிப் பணிகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *